Skip to main content

Posts

அடங்கிப் போனான்

அவன் ஊருக்குள் வாழ்ந்திருந்த காலத்தில் பதுங்குவதில் பூனையைப் போலவும் பாய்வதில் சிறுத்தையைப் போலவும் பிறர்பொருளை கவ்விக் கொள்வதில் காகத்தைப் போலவும் அடுத்தவரை துவசம் செய்வதில் காட்டு யானையைப் போலவும் அன்பு காட்டுவதில் இளந்தூறலைப் போலவும் கோபத்தில் முகம் காட்டுகிற போது கர்ஜிக்கும் சிங்கத்தைப் போலவும் மவுனத்தில் சாரைப்பாம்பைப் போலவும் நடமாடித் திரிந்தான் அவன் மரணித்த போது எந்த ஒப்புமையும் தோன்றவில்லை அடங்கிப் போனான் பிரபஞ்சம் எனும் சுருக்கு வலைக்குள்…….
Recent posts

விளிம்புநிலை வாசிப்பு நோக்கில் ஒரு சவரக்காரனின் கவிதை மயிருகள் சு.செல்வகுமாரன்

முன்னுரை “தலித்” எனும் சொல்லுக்கு பன்முகப்பட்ட பொருள் நிலைகள் வழங்கப்பட்டு வருகின்றன. அதன் உள்ளீடுகளில் ஒன்றாகவே விளிம்புநிலை எனும் சொல்லாடலும் அர்த்தம் பெறுகிறது. விளிம்புநிலை ஒரு முனை என்றால் அதன் இன்னொரு முனையில் அல்லது மையத்தில் ஒடுக்குதலின் இயக்கம் நிகழ்வதைக் காணலாம். அந்த இன்னொரு முனையும் ஒரு விளிம்புதான் என்று தலித்திய, இடது சாரியச் சிந்தனையாளர்கள் அதன் அடுக்கு முறையைக் கலைத்துப் போடுவதும் உண்டு. சாதியவாதிகளோ சேரியை ஊரின் கடைசியாகச் சுட்டுவர். ஆனால் தலித்தியச் சிந்தனையாளர்கள் சேரியை ஊரின் தொடக்கமாக முன்வைப்பதும் இங்கு கவனத்திற்குரியது. விளிம்பு நிலை மக்கள் குறித்து பேசும் சந்திரபோஸ் “நிலம், பணம், சாதி, அதிகாரம், அனைத்துவித ஆதிக்கம், மேட்டிமை, மேலாண்மை ஆகிய உரிமைகளுடன் மையத்தில் இருப்பவர்களால் புறந்தள்ளப்பட்ட – மறுத்து ஒதுக்கப்பட்ட, காயப்படுத்தப்பட்ட பழங்குடியினர், ஒருங்கிணைக்கப்படாத தொழிலாளர்கள், குழந்தைத் தொழிலாளர்கள், அரவாணிகள், விபச்சாரத் தொழிலில் தள்ளப்பட்டுள்ளப் பெண்கள், கைவிடப் பட்டவர்கள், ஆதரவற்ற விதவைகள், ஒடுக்கப்பட்ட தேசிய இனத்தினர் எனப் பரந்துபட்ட பொருள் வரையறையின

அயலகப் புனைவு வெளியும் தமிழக வாசிப்புச் சூழலும் - பேரா அ. குணசேகரன்

- கவிஞர், ஆய்வாளர், பேராசிரியர் எனப் பல நிலைகளிலும் தம் பணிகளைத் திறம்பட ஆற்றிவரும் முனைவர். சு. செல்வகுமாரன், நவீன இலக்கியக் களத்தில் அதிலும் குறிப்பாக புலம்பெயர்ந்தோர்ப் புனைவு வெளியைத் தம் ஆய்வுக்களமாகக் தேர்ந்து கொண்டு தொடர்ந்து செயலாற்றி வருபவர். கேரளப் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டத்திற்காகப் பயின்று கொண்டிருந்த காலத்திலேயே நூல் எழுதி வெளியிடும் பணியில் தம்மை ஈடுபடுத்திக்கொண்டு, தொடர்ந்து ஆண்டுக்கொரு நூல் வெளியிடுவது என்ற நோக்கில் பல நூல்களை வெளியிட்டுக் கவனம் பெற்று வருபவர். இவர் தம் அண்மைப் படைப்பாக “விமரிசன நோக்கில் அயலகத் தமிழ் புதினங்கள்” என்னும் நூலை ஆய்வு உலகுக்குக் கையளிக்கிறார். அயலகப் புதினப் படைப்புகள் பற்றிய நூலை வழங்குவதற்குரிய வாசிப்பு அனுபவமும் ஆய்வு அனுபவமும் ஒருங்கே பெற்றிருந்ததன் காரணமாக இந்நூல் எளிதில் சாத்தியமாகியிருக்கிறது. தம் முனைவர் பட்ட ஆய்வுக்காக “ஈழ

மாவட்ட (அ) வட்டார இலக்கியக் களஞ்சியம் - உருவாக்கத்தின் தேவை குமரி மாவட்டத்தை முன்வைத்து

முனைவர் சு. செல்வகுமாரன் தமிழ் உதவிப்பேராசிரியர் (அண்ணாமலைப்பல்கலைக்கழகம்) அரசு கலைக் கல்லூரி பரமக்குடி இலக்கியம் எனும் பெரும் நீரோட்டம் இன்று புத்தகம், இதழ்கள், இணைய இதழ்கள், பிளாக்கர், முகநூல் எனும் வெவ்வேறு ஊடகங்களின் வாயிலாக மக்களை வந்தடைந்து கொண்டிருக்கின்றன. அந்தந்த தளத்துக்கேற்ப வாசகர்களும் வேறுபட்ட சிந்தனைப் போக்குடையவர்களாக விளங்குகின்றனர். மேலும் நவீன தொழில்நுட்ப வசதி இன்று பெரும்பான்மையோரை படைப்பாளிகளாகவும், விமர்சகராகவும் ஆக்கிக் கொண்டிருக்கின்றன. இவர்கள் தாம் சிந்தித்தவற்றை ஏதோ ஒரு குழுசார்ந்த வாசகத் தளத்திற்கோ, தேவைப்பட்டால் பொது வாசகத்தளத்திற்கோ உடனடியாக கொண்டு சேர்க்கின்ற வாய்ப்பும் அது குறித்த விமர்சனத்தை உடனடியாக பெறுகின்ற வாய்ப்பும் இன்று அதிகமாகவே உள்ளது. அதுபோலவே ஒரு படைப்பாக்கத்தின் ஒரு சில பி
தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் குமரி மாவட்டம் சார்பில் பேராசிரியர் நா.வானமாமலை நினைவு 34 - வது கலை இலக்கிய முகாம் மே – 26 - 27 ல் முட்டத்தில் நடை பெற்றது. நிகழ்வில் சு. செல்வகுமாரனின் பூவரசம்பூ மஞ்சளில் இருந்து சிகப்பாக கவிதை நூலினை தோழியர் வா. கீதா அவர்கள் வெளியிட தோழர் டி. தருமராஜ் அவர்கள் பெற்றுக் கொண்டார்.

நூல் வெளியீடு

சு.செல்வகுமாரனின் பிரதிகளின் பண்பாட்டு அரசியல் நூலினை சி.சொக்கலிங்கம்(தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்ற மாநிலச் செயலாளர் ) அவர்கள் வெளியிட பேராசிரியர் முனைவர் வி. வேணுகுமார் பெற்று கொள்கிறார்.

கருமுடியின் கம்பீரம்

ஒவ்வொரு பொழுதும் எனக்குள் இருக்கும் உன்னை அழித்து விடப் பார்க்கிறார்கள். முகம் காட்டியபடியே எனக்குள் நீ எல்லா காலங்களிலும். அப்பாவிடம் முகச்சவரம் செய்த ஊர் இளைஞர்களிடம் முகம் காட்டும் கருமுடியின் கம்பீரத்தோடு