Skip to main content

Posts

Showing posts from December, 2011

மொட்டவிழ்க்கும் சிறுபொழுதில்

துஞ்சும் யானைக் கூட்டமாய் கிடந்த எண்ணற்றப் பாறைகளை சிதிலமாக்கியவன் அவன் முல்லை மொட்டவிழ்க்கும் சிறுபொழுதில் கைக் கொண்ட கருமருந்தினால் தனது மூச்சுக் காற்றை நிறுத்திக் கொள்கிறான் வேறு வழியின்றி கொழுத்தப்பட்ட திரி கருமருந்தின் நாற்றத்தோடு நீட்டிப்பைக் குறைத்துக் கொண்டே வருகிறது இன்னுமொரு மொட்டவிழும் பொழுதில் கனத்த ஓசையோடு சிதறலாம் அந்தப் பாறை அதில் அவனுக்கான கற்களும் இருக்கலாம் எப்போதும் போலவே வேறுபட்ட முகங்களோடு

பேராசிரியர் ந.முத்துமோகனின் மார்க்சியக் கட்டுரைகள் புலப்படுத்தும் - சாதி - மதம் - இறை

தத்துவத்தளத்தில் மிக நுட்பமான விமர்சனங்களை முன்வைக்கும் பேராசிரியர் ந.முத்துமோகனின் மார்க்சியக் கட்டுரைகள் (காவ்ய -2007). நூற்றி இருபது கட்டுரைகள் அடங்கிய இத்தொகுப்பில் சில கட்டுரைகளை குமரி,த.க.இ.பெ., பேரா. நா.வானமாமலை நினைவு 33 வது கலை இலக்கிய முகாமில் கட்டுரை வைக்கும் பொருட்டு வாசிக்க நேரிட்டது. (கட்டுரைகள்-6,9,10,11,14,15,16,17,18,19,20,43,44,46,47,48,49,56,57,63,82,83,102,104,107,109,110) அவை குறித்து இக் கட்டுரையில் விவாதிக்கப்படுகிறது. சாதி, மதம், பக்தி, இறை, வைதீகம்,அவைதீகம் சார்ந்த கருத்துருவாக்கங்கள், புனிதம், புனிதமற்றவை போன்ற எதிர்வுகளின் உருவாக்கம், உலகை ஏற்றுக்கொள்ளுதல், மறுத்தல் எனும் தத்துவங்களின் பின்னணி, வட்டாரம் சார்ந்து வேறுபடும் பக்தியின் தன்மை, குருமார்கள், சித்தர்களின் செயல்பாடுகள், சமண, பௌத்த, சைவ, வைணவ சயமங்கள் என ஒவ்வொன்றின் ஊடாகவும் பயணிக்கும் பேராசிரியர் அவர்கள் அவைகளின் சமூகச் செயல்பாடுகள் குறித்து மிக நுட்பமான விவாதங்களை முன்வைக்கின்றார். குறிப்பாக மேற்சுட்டிய நிலைகளில் சமூகத்தை கட்டமைத்தல், கட்டுடைத்தல் அல்லது மறுகட்டமைப்பு செய...

துயரம்

குளத்துமடை திறக்கப்பட்ட கணத்தில் வாய்க்காலில் சீறிப்பாய்ந்திடும் பெரு வெள்ளமாய் நீண்டு செல்கிறது விரைவு இரயில்வண்டி மடைமுகத்து ஈர்ப்பில் வெளியேற்றப்படும் விளிச்சி சள்ளை கயிலி மீன்களாய் ஜெனரல் கம்பார்ட்மன்ற் மக்கள் சுருட்டப்பட்ட லக்கேஜ் பொதிகளாய் உயரே பொருத்தப்பட்டிருக்கும் ஓரடி அகல கம்பிகளிலும் கழிவறை ஒரங்களிலும் பூட்டிவிடாதபடிக்கு கதவிடுக்குகளிலும். இரயில் வண்டியாய் நீள்கிறது இருள் நகரத்து மின்ஒளிகளை நக்கித் துடைத்தபடி.

கவிதை

பள்ளத்தாக்குகளில் பதுங்கி இருக்கும் பழுதடைந்த குடிசைகளின் எச்சம் முகட்டில் நிமிர்ந்து நிற்கிறது தேவாலயம் சிலுவைப் பாதையின் துயரம்.