Skip to main content

Posts

Showing posts from November, 2011

கவிதை

குழந்தைகளை விழுங்கித் துப்புகின்றனர் காலையிலே கடத்தப்பட்டு குடிநீர் அருந்தவும் சிறுநீர்கழிக்கவும் வழிமறிக்கும் மிஸ்களும் ஆயாக்களும் அந்நியமொழியின் பயிற்றுவிப்பு புத்தகச்சுமை மாலைநேர டியுசன் வெறிநாயாய் துரத்தும் பெற்றோர்கள் முழிபிதுங்கி வெளியேறும் குழந்தைகள் ரிமோட்டை கையில் எடுத்தபடி திறக்கின்றனர் ஏழாவது உலகை நையாண்டியுடன் துள்ளிக்குதிக்கின்றன உயிரில்லாத கார்ட்டுன் பொம்மைகள்

தமிழ்ச் சமூக இயங்கியலில் - பகுத்தறிவாளர்களின் பங்களிப்பு

சமூக இயங்கியலை அல்லது நிகழ்வுகளைப் புரிந்துகொள்வதற்கு வசதியாக நாம் அதனை வௌ;வேறு நிலைகளில் பிரித்து நோக்குகின்றோம். அந்த வகையில் கால அடிப்படையில் பார்க்கின்ற போது பதினெட்டு மற்றும் பத்தொன்பதாம் நூற்றாண்டுகளில் இந்திய மற்றும் தமிழ்ச் சமூகப்பரப்பில் எங்கும் சாதி, மதம், சமயம்,கடவுள்,மூடச்செயல்பாடு என இவை சார்ந்த இருள் மிகவும் அடர்த்தியாகப் பரவிக் கிடந்தது. மட்டுமின்றி பார்ப்பனியத்தால் அவை பெரிதும் வளர்த்தெடுக் கப்பட்டன. குறிப்பாக பாலியல் திருமணம், விதவைகளை உடன்கட்டை ஏறச்செய்தல், தமிழக வடமாவட்டங்களில் கூத்தாடி சமூகத்தைச் சேர்ந்த இளம்பெண்கள் செல்லியம்மனுக்குப் பொட்டுகட்டி விடப்படுதல்ää தேவதாசி முறை, சாதிய அடக்கு முறைகள்ää படிநிலை முறையில் மக்களின் உழைப்பு சுரண்டப்படுதல், தீமிதி திருவிழாக்கள், மட்டுமின்றி தில்லையிலே நந்தன் தீக்கிரையாக் கப்படுதல், குமரியிலே வைகுண்டசாமி புலிக்கூண்டில் அடைக்கப்படுதல் என எண்ணற்ற நிகழ்வுகளைப் பட்டியலிடலாம். கேரள மாநிலத்தில் அன்று இத்தகைய அவலம் மிதமிஞ்சி இருந்ததைக் கண்ணுற்ற சுவாமி விவேகானந்தர் கேரளத்தைப் பார்த்து ‘பைத்தியக்கார விடுதி’ என்று கூறியதும் பதிவுக்குரிய...

கவிதை

காதல் மனிதனை மனிதனாக்கும் நாகரீகத்தின் தொடக்கம் இல்லறத்திற்கான விவாத மேடை சாதி மதங்களின் சங்கமப் பேழை நானும் அவளும் பருவம் எய்தியதின் அடையாளம் வாழ்வின் வசந்தத்திற்கான தொடக்க விழா நரம்புகளை நாணேற்றி மனதை நடுங்க வைக்கும் மந்திரம்; தியாகம் உன்னிடமும் இருப்பதை உணர்த்தும் முதற்சொல் காமம் தலைததூக்கியதின் வெளிப்பாடு கவிதையின் ஊற்றுக்கண் காலத்தை தின்னும் கறையான் நட்பையும் உறவையும் சேதப்படுத்தும் முதுசொல் சிரிப்பால் சிறைவைக்கும் விலங்கு மனிதனை அடிமையாக்கும் போதை தூய்மையும் பொய்மையும் கட்டி புரளும் இனிய மொழி அது மரணத்திற்கான நுழைவு வாயில்

கவிதை

குழந்தைகளை விழுங்கித் துப்புகின்றனர் காலையிலே கடத்தப்பட்டு குடிநீர் அருந்தவும் சிறுநீர்கழிக்கவும் வழிமறிக்கும் மிஸ்களும் ஆயாக்களும் அந்நியமொழியின் பயிற்றுவிப்பு புத்தகச்சுமை மாலைநேர டியுசன் வெறிநாயாய் துரத்தும் பெற்றோர்கள் முழிபிதுங்கி வெளியேறும் குழந்தைகள் ரிமோட்டை கையில் எடுத்தபடி திறக்கின்றனர் ஏழாவது உலகை நையாண்டியுடன் துள்ளிக்குதிக்கின்றன உயிரில்லாத கார்ட்டுன் பொம்மைகள்

ஷோபாசக்தியின் கொரில்லா, ம் புனைவின் அரசியல்

     ஷோபாசக்தியின் ‘ கொரில்லா ’ ‘ ம் ’ புனைவுகள் ஈழப்போர் , புலம்பெயர்ச் சூழல் , புகலிடத்துச் சிக்கல்கள் குறித்து  பேசுவதில் மிகவும் முதன்மை வகிக்கின்றன. குறிப்பாக ஈழத்தமிழ் மக்களின் தாயகப் பற்று , அவர்களின் அப்பாவித்தனம் , உணர்ச்சி பற்றி விரிவாக பேசுகின்றன. மட்டுமின்றி ஈழவிடுதலை இயக்கங்களின் அதிகார துஷ்பிரயோகம் இலங்கை , இந்திய இராணுவத்தின் வன்மத்தையும் மிக நுட்பமாகப் பதிவு செய்துள்ளன.      ஷோபாசக்தியின் புனைவுகள் கட்டமைப்பிலும் வேறுபட்ட புதிய நிலைகளை அறிமுகம் செய்கின்றன. கொரில்லா சுமார் 20 பக்க அளவிலான ஒரு தஞ்சம் கோரும் கடித விண்ணப்பத்தின் மூலம் ஆரம்பமாகின்றது. அதன் தொடர்ச்சியாக இடம் பெற்றுள்ள கவிதைகள் , பாத்திரங்கள் , இடங்கள் , பெயர்களுக்கான வரலாற்று குறிப்புகளுடனான விளக்கங்கள் ஓர் அகராதியியல் நிலையை தன்னகத்தே கொண்டுள்ளதை உணர்த்துகின்றது. இவ் அகராதியியல்த் தன்மை ஈழப்போர் , இயக்கங்கள் , மனிதர்கள் , புலப்பெயர்வு குறித்தான உண்மைத் தன்மையினை நமக்கு வெளிப்படுத்துவதோடு ஒரு சமூக , வரலாற்று நாவலாக தம்மை பிரகடனப்படுத்திக் கொள்கிறது. ‘ ம் ...

Invitation

தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் குமரி மாவட்டம் சார்பில் பேராசிரியர் நா.வானமாமலை நினைவு 34 - வது கலை இலக்கிய முகாம் மே – 26 - 27 ல் முட்டத்தில் நடை பெற்றது. நிகழ்வில் சு. செல்வகுமாரனின் பூவரசம்பூ மஞ்சளில் இருந்து சிகப்பாக கவிதை நூலினை தோழியர் வா. கீதா அவர்கள் வெளியிட தோழர் டி. தருமராஜ் அவர்கள் பெற்றுக் கொண்டார்.