குழந்தைகளை விழுங்கித் துப்புகின்றனர்
காலையிலே கடத்தப்பட்டு
குடிநீர் அருந்தவும் சிறுநீர்கழிக்கவும்
வழிமறிக்கும் மிஸ்களும் ஆயாக்களும்
அந்நியமொழியின் பயிற்றுவிப்பு
புத்தகச்சுமை மாலைநேர டியுசன்
வெறிநாயாய் துரத்தும் பெற்றோர்கள்
முழிபிதுங்கி வெளியேறும் குழந்தைகள்
ரிமோட்டை கையில் எடுத்தபடி
திறக்கின்றனர் ஏழாவது உலகை
நையாண்டியுடன் துள்ளிக்குதிக்கின்றன
உயிரில்லாத கார்ட்டுன் பொம்மைகள்
காலையிலே கடத்தப்பட்டு
குடிநீர் அருந்தவும் சிறுநீர்கழிக்கவும்
வழிமறிக்கும் மிஸ்களும் ஆயாக்களும்
அந்நியமொழியின் பயிற்றுவிப்பு
புத்தகச்சுமை மாலைநேர டியுசன்
வெறிநாயாய் துரத்தும் பெற்றோர்கள்
முழிபிதுங்கி வெளியேறும் குழந்தைகள்
ரிமோட்டை கையில் எடுத்தபடி
திறக்கின்றனர் ஏழாவது உலகை
நையாண்டியுடன் துள்ளிக்குதிக்கின்றன
உயிரில்லாத கார்ட்டுன் பொம்மைகள்
அருமையான கவிதை செல்வா. வாழ்வின் அற்புதத்தைக் காட்டுபவை குழந்தைகள். அவர்களை ஆங்கிலப்ப்ள்ளிகள் எனும் வனாந்திரத்திற்குள் ராணுவச் சிறைக்குள் அடைத்து சித்திரவதை செய்வதைப்போல கல்வி போதிக்கப்படுகிறது. மெகா சீரியல்களை ஒழிக்கிற காலம்தான் மனித வாழ்வின் வேரை மீட்டெடுக்கும் வழியாகும். நையாண்டியுடன் துள்ளிக் குதிக்கின்றன உயிரில்லாத கார்ட்டூன் பொம்மைகள் அருமையான சொற்பிரயோகங்கள்.
ReplyDelete