சமூக இயங்கியலை அல்லது நிகழ்வுகளைப் புரிந்துகொள்வதற்கு வசதியாக நாம் அதனை வௌ;வேறு நிலைகளில் பிரித்து நோக்குகின்றோம். அந்த வகையில் கால அடிப்படையில் பார்க்கின்ற போது பதினெட்டு மற்றும் பத்தொன்பதாம் நூற்றாண்டுகளில் இந்திய மற்றும் தமிழ்ச் சமூகப்பரப்பில் எங்கும் சாதி, மதம், சமயம்,கடவுள்,மூடச்செயல்பாடு என இவை சார்ந்த இருள் மிகவும் அடர்த்தியாகப் பரவிக் கிடந்தது. மட்டுமின்றி பார்ப்பனியத்தால் அவை பெரிதும் வளர்த்தெடுக் கப்பட்டன. குறிப்பாக பாலியல் திருமணம், விதவைகளை உடன்கட்டை ஏறச்செய்தல், தமிழக வடமாவட்டங்களில் கூத்தாடி சமூகத்தைச் சேர்ந்த இளம்பெண்கள் செல்லியம்மனுக்குப் பொட்டுகட்டி விடப்படுதல்ää தேவதாசி முறை, சாதிய அடக்கு முறைகள்ää படிநிலை முறையில் மக்களின் உழைப்பு சுரண்டப்படுதல், தீமிதி திருவிழாக்கள், மட்டுமின்றி தில்லையிலே நந்தன் தீக்கிரையாக் கப்படுதல், குமரியிலே வைகுண்டசாமி புலிக்கூண்டில் அடைக்கப்படுதல் என எண்ணற்ற நிகழ்வுகளைப் பட்டியலிடலாம். கேரள மாநிலத்தில் அன்று இத்தகைய அவலம் மிதமிஞ்சி இருந்ததைக் கண்ணுற்ற சுவாமி விவேகானந்தர் கேரளத்தைப் பார்த்து ‘பைத்தியக்கார விடுதி’ என்று கூறியதும் பதிவுக்குரியதாகும். இந்த நிலைப்பாட்டில் உலகெங்கும் சமூகப் போராளிகளும் பகுத்தறிவுச் சிந்தனையாளர்களும் இந்த மண்ணிலே தோன்றி சமூக இயக்கத்தில் மாற்றம் காணவும் சமூகத்தை மீட்டுருவாக்கம் செய்திடவும் மிகத்தீவிரமான பங்களிப்புகளைச் செய்தனர். அவை பேச்சாகää கவிதை வீச்சாக, போராட்டங்களாக, அமைப்புகளைக் கொண்டு நிகழ்த்திய நிகழ்வுகளாக என வௌ;வேறு நிலைகளில் நடைபெற்றன. தமிழகத்தைப் பொறுத்தவரை சிவவாக்கிய சித்தர், வள்ளலார், தந்தை பெரியார், திருவள்ளுவர், அண்ணா, அய்யா வைகுண்டசுவாமிகள், அம்பேத்கார், பாரதி, பாரதிதாசன், கேரளத்தில் நாராயணகுரு, அய்யங்காளி போன்றோரும் இதில் குறிப்பிடத்தக்கவர்கள்.
மேற்சுட்டிய நிலையில் காணப்பெற்ற சமூக இருளைப் போக்கிட மேலே கூறியதற்கேற்ப வேறுபட்ட பல சமூகச் சிந்தனையாளர்களாலும் பகுத்தறிவுக் கருத்துக்கள் முன்வைக்கப் பட்டிருந்தாலும் ‘பகுத்தறிவு’ என்னும் சொல்லாடலை ஒர் அறிவு சார்ந்த ஆயுதமாக முன்னெடுத்து போராட்டக் களத்திற்கு கொண்டு வந்தவர் தந்தை பெரியார். பார்ப்பனியத்தாலும், சுயநலவாதிகளாலும் புனிதமாக்கப்பட்டிருந்த கடவுளர்களில் மூலவரான விநாயகர் சிலை உடைக்கப்பட்டதும் இராமன் எரிக்கப்பட்டதும் கொடி கந்தல் துணியாகச் சித்தரிக்கப்பட்டதும் மொழியை வெங்காய மொழியாக அடையாளப்படுத்தியதும் மட்டுமின்றி முதன்மையான பதவிகளும், அரசும் கூட பெரியாரின் கைகளில் சிக்குண்டு சின்னாபின்னமாக்கப்பட்டது குறிப்பிடத்தக்கதாகும். இங்கு இன்னொன்றையும் பதிவு செய்தாக வேண்டும். இத்தகைய செயல்களையெல்லாம் செய்து காட்டிய தந்தை பெரியார் இவைகளை போட்டிக்காகவோ பெயருக்காகவோ செய்தவர் அல்லர். மாறாக அனைத்துக்கும் ஆதாரப்பூர்வமான பகுத்தறிவுப்பூர்வமான விளக்கங்களை அவர் முன்வைத்ததே அவரை இந்தச் சமூகம் இன்றும் ஏற்றுகொண்டு கொண்டாடுவதற்கான காரணம் ஆகின்றது. 30-7-1956 விடுதலை இதழில் ‘இராமன் - எரிக்க ஆசை’ என்று அவர் எழுதிய கட்டுரையிலே “நான் இராமன் படத்தை (உருவத்தை) கொழுத்த வேண்டும் என்பதற்கு ஏராளமாக இராமன் சம்பந்தபட்ட நூல்களை ஒருதடவைக்கு நூறுதடவை படித்து ஆராய்ந்து பார்த்ததோடு சுமார் முப்பது நாற்பது ஆண்டு ஆராய்ச்சியில் கழித்து விட்டு ஆயிரக்கணக்கான கூட்டங்களில் கோடிக்கணக்கான மக்களிடம் பேசி மெய்பித்து விட்டு பல புலவர்களையும் கடவுள் நம்பிக்கையுள்ளவர்கள் என்பவர்களையும் ஏற்க செய்து விட்ட பிறகுதான் கொழுத்த செய்கிறேன்”(ஈ.வே.ராமசாமி என்கிற நான் தொகுதி-2 பக் - 1956) என அவர் தரும் வாக்குமூலம் இனியும் காலத்தால் எவராலும் தரமுடியாது என்பதை நாம் அறுதியிட்டுக் கூறமுடியும். மேலும்‘பலித்தவரை என்பது தான் பார்ப்பனியமும் இந்துமதமும்’ என்று பெரியாரால் விமர்சிக்கப்படுவது பார்ப்பனியத்தின் இழிநிலையை அதன் சூட்சுமத்தை புலப்படுத்துவதாய் உள்ளது.
பகுத்தறிவின் அவசியத்தை, கூர்மையான மதிநுட்பத்தின் தேவையை, உண்மை நோக்கிய தேடலை வலியுறுத்தும் வள்ளுவர்
“எப்பொருள் யார்யார் வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்பொருள் காண்பதறிவு” ( குறள் - 423 )
எனச்சுட்டுகின்றார். இந்த மொழியின் தேவையை நாம் நோக்குவோமாயின் அன்றைய காலகட்டத்தில் மூடத்தனங்கள் நிறையவே வழக்கில் இருந்தன என்பதை நாம் எளிதாகப் புரிந்து கொள்ள முடியும்.
சமூக இயங்கியலில் ஆணுக்குப் பெண் கீழானவளாக இரண்டாம் தரம் சார்ந்தவளாகப் பார்க்கப்படுவதும் அவளின் உடலில் நிகழ்கின்ற மாற்றங்களைக் கணக்கில் கொண்டு குறிப்பிட்ட காலக்கட்டங்களிலே தீட்டுடையவளாக ஒதுக்கப்படுவதும் காலம் காலமாக நடைமுறையில் இருந்து வந்த ஒன்றாகும். அதனைக் கேள்விக்குள்ளாக்கும் சிவவாக்கியர்
“மாத மாதந் தூமைதான் மறந்து போன தூமைதான்
மாதமற்று நின்றலோ வளர்ந்து ரூபமானது
நாதமேது வேதமேது நாற்குலங்களேதடா
வேத மோதும் வேதியா விளைந்தவாறும் பேசடா”
(சிவ.வா.பா - 126)
என்கிறார். மேலும் மனிதன் வாழ்வதற்கும்ää உணவை மென்று விழுங்குவதற்கும் உமிழ்நீர் ஆதாரமானது. மட்டுமின்றி நாட்டுப்புற மருத்துவத்தில் உமிழ்நீர் இன்றும் பயன்பாட்டில் முதன்மை பெற்று வருவதுமான உமிழ்நீரை பார்ப்பனியம் எச்சில் என்று இழிவாகப் பேசுவதையும் சிவவாக்கியர் குறிப்பிடுகின்றார்.
“வாயி லெச்சில் போக வென்று நீர்தனைக் குடிப்பீர்கள்
வாயிலெச்சில் போன வண்ணம் வந்திருந்து சொல்லுமே”
(சிவ.வா.பா - 38)
கடவுளை வழிபடவும் அவரை அடையவும் புறஉடல் சார்ந்த புற உலகு சார்ந்த சுத்தம்ää ஒழுக்கம்ää சடங்காச்சாரங்கள் ஆகியவையும் பிராமணர்களால் புனிதப்படுத்தப்பட்டன. அதனையும் சிவவாக்கியர் தமது அழுத்தமான வரிகளால் கேள்விக்குட்படுத்துகின்றார்.
“காலை மாலை நீரிலே முழுகுமந்த மூடர்காள்
காலை மாலை நீரிலே கிடந்த தேரை யென்பெறும்” (சிவ. வா. பா - 112)
எனும் பாடல் வரிகள் இதனை உறுதி செய்கின்றன. இதே காலகட்டத்தில் குமரிமாவட்டத்தில் பெரும்பான்மை சமூகமான நாடார் சமூகமும் இன்னபிற ஒடுக்கப்பட்ட சமூகங்களும் உயர்சாதி மற்றும் ஆட்சியாளர்களால் மிகுந்த இன்னலுக்குள்ளாக்கப் பட்டிருந்தது. இந்த அவலம் சமூக வரலாற்றில் கறுப்பு அடையாளங்களாகச் சுட்டத்தக்கன. குறிப்பாக அரசின் வரிவிதிப்பும் தண்டனைமுறைகளும் மிகக்கடுமையாக இருந்தன. அத்துடன் தாழ்த்தப்பட்ட ஆண்களுக்கு தாடி முளைத்தால் முடிவரியும், தாழ்த்தப்பட்ட பெண்களுக்கு மார்பு அரும்பினால் முலைவரியும் கட்ட வேண்டியிருந்தது. மட்டுமின்றி நாடார்கள் பனை ஏறுவதற்குக் பயன்படுத்தக்கூடிய பாளை அருவாளுக்குக் கூட வரிவிதிக்கப் பட்டிருந்ததை அறிய முடிகிறது.
“தூலமுடன் அருவாய் துருவட்டிக்கே ஆயம்”
(அகி.அம்.பக் - 4770 - 73)
இதனை 1865 ஆம் ஆண்டைய திருவிதாங்கூர் ஆட்சிஅறிக்கையும் உறுதி செய்கின்றது.
“சில்லுக் கருப்புக்கட்டி சீரகமிட்டே ஊற்றி
கொல்லைதனில் சான்றோரைக் கொண்டுவா என்றடிப்பான்”
(அகி. அம்.பக் - 4786-87)
என்னும் வரிகள் உயர்சாதி மற்றும் ஆட்சியாளர்களின் அதிகாரத்தை அடையாளப்படுத்துவதாய் உள்ளன. இந்நிலையில் அதே குலத்தில் தோன்றிய சமூகப் போராளி அய்யா வைகுண்டசுவாமி பகுத்தறிவை துணை கொண்டு மிகப்பெரும் மாற்றங்களை சாதி, மத, சடங்கியல் ரீதிகளில் நிகழ்த்திக் காட்டியவர். அவரைப் பற்றிக் குறிப்பிடும் பேரா. கி. நாச்சிமுத்து அவர்கள் “வள்ளலார் (1823 - 1874) இராமகிருஷ்ண பரமஹம்சர் (1836 -1886) திருநாராயணகுரு (1856 - 1928) போன்றவர்களை நோக்க வைகுண்டசுவாமிகள் காலத்தால் முற்பட்டவர். அது மட்டுமல்ல அவர்களுக்கில்லாத வேறு சிறப்புகளையும் பெற்றவர். சமய மறுமலர்ச்சியோடு சமுதாய விடுதலை இயக்கத்தையும் முன்னின்று நடத்தியதால் கொடிய ஆட்சியாளர்களின் வெங்கொடுமைகளை சிறைவாசத்தை அடக்குமுறைகளை அனுபவித்தவர் என்பதும்ää சங்கம் அமைத்து மக்களை ஒன்று கூட்டி வழிநடத்தி சென்ற இவர் செயல் இடைக்கால சமுதாய வரலாற்றில் யாரும் செய்யாத செயல். அடுத்ததாக சமயத்தை நீதிப் போராட்டத்திற்கான களமாக்கியதும் இவருடைய அறிவார்ந்த பார்வையை காட்டுகின்றது” (கேரள சமூக நீதி போராட்டங்கள் நாராயணகுருவும் அயயங்காளியும் பிறரும் பக் - 27) என்பதும் அவரைப் பற்றிய புரிதலை நமக்குத் தருவதாய் உள்ளது. குறிப்பாக ஒடுக்கப்பட்ட மக்கள் பொதுக்குளம் மற்றும் கிணற்றில் அனுமதிக்கபடாமலும் பெருந்தெய்வ வழிபாட்டை நெருங்க முடியாமலும் இருந்த நேரத்தில் மிகப்பெரிய சமூக மாற்றம் காண விழைந்தார். இன்று சாமித்தோப்பு என அழைக்கப்படும் அன்றைய பூவண்டந்தோப்பில் வைகுண்டர் பதி (கோவில்) ஒன்றை ஏற்படுத்தினார். அதன் அருகே தான் தோண்டிய முந்திரிக் கிணற்றில் அனைவரையும் குளிக்கச் செய்ததோடு பள்ளி அறையில் ஒரு நிலைக்கண்ணாடியை வைத்து அதனை ஐந்து முறை சுற்றி வரச்செய்து தன்னைத் தானே உணர்ந்து கொள்ளச் செய்தார். அவர்களைத் தொட்டு நாமம் (திருமண்) சாற்றிவிட்டார். மட்டுமின்றி காணிக்கைப் போடாதுங்கோ, காவடி எடுக்காதுங்கோ, கற்பூரம் காட்டாதுங்கோ, நரபலியிடாதுங்கோ என்றும் மக்களுக்கு அறிவுறுத்தினார். பூவும் பழமும் வைத்து பூசைகள் மேற்கொள்ளச் செய்தார். சாதி வேறுபாடின்றி அனைவரும் குடியிருக்க முட்டபதியில் சமத்துவ காலணியை ஏற்படு த்தினார். அதனை
“சூழ அணியாய் சுற்றுமதில் போல நீள அரங்கு வைத்து
நெருங்கப் புரைகள் வைத்து ஓர் திசையில் வாயிலொன்றாக விட்டு”
“செய்யும் கூலி உடன் கையில் கொடுத்திடுங்கோ”
“கொத்தைக் குறையாதே குறை மரைக்கால் வையாதே”
(அகி.அம்.பக் - 295)
என அருள் நூலில் சுட்டுகின்றார். அத்துடன் அவர்
“ஏடு தந்தேன் உன்கையில் எழுத்தாணியும் கூட தந்தேன்
மக்களே பட்டயந்தந்தேன் பகைத் தீர்த்தேன் பதறாதே என் மகனே”
(அ.நூ. பக் - 37)
என்பதன் மூலம் அவர் கல்வியை முன்னெடுப்பதும் முதன்மையானதாகும். இதனை ஒட்டிய சமகாலத்திலேயே (1823-74) வடமாவட்டங்களில் இதற்கு இணையான பகுத்தறிவுக் கருத்தினை முன்வைத்தவர்களில் வள்ளலார் குறிப்பிடத்தக்கவராக விளங்குகின்றார். இவரும் சாதியை, மதத்தை, சடங்குகளை, பொய்யென வெறுத்ததோடு இறைவனை சோதி வடிவாகக் கண்டுணர்ந்தவர்.
“சாதியிலே மதங்களிலே தூய நெறிகளிலே
சாத்திரச் சந்தடிகளிலே கோத்திரச் சண்டையிலே
ஆதியிலே அபிமானித் தலைகின்ற உலகீர்
அலைந்தலைந்து வீணேநீர் அழிதல் அழகலவே” ( 5556 )
என அறிவுறுத்துவதன் மூலம் இந்தச் சமூக இயங்கியலில் ஒரு மீட்டுருவாக்கத்தை ஏற்படுத்த முனைவதை நாம் அறியமுடிகின்றது.
இறைச்சிந்தனையின் வளர்ச்சி மனிதனை உயிர்களைப் பற்றி நினைப்பதற்கும் அன்பு செலுத்துவதற்குமே உரியது என்பதை அவரது ஜீவகாருண்யச் சிந்தனை புலப்படுத்துகின்றது. அவர் புலால்மறுத்தல்; பிற உயிர்களைக் கொல்லாமை, அற்றார் அழிபசிதீர்த்தல் எனும் மூன்று கருத்தினையும் முன்னெடுத்து நடைமுறைப்படுத்துகின்றார். பசிப்பிணியின் அவலத்தை மணிமேகலை ‘குடிப்பிறப்பு அழிக்கும் விழுப்பம் கொல்லும்’ என்கிறது. பசியின் கொடுமையினை இன்னும் அதிகமாகவே வள்ளலார் உணர்ந்து கொண்டவர் என்பதாலேயே 1867 - இல் சத்திய தருமசாலை ஒன்றை ஏற்படுத்தி பசிப்பிணியினை போக்கத்துவங்கினார்.
மேலும் ‘மதம் யாதாயினும் மனுசன் நன்னாயிருந்தால் மதி’ என்று கூறிய நாராயண குருவும்,
“சந்தணம் அகிலும் தனித்தனிக் கந்தம் நானும்
அந்தணர் தீயில் வீழ்ந்தால் அவர் மணம் வீசக் காணோம்
செந்தனல் புலையர் வீழ்ந்தால் தீ மணம் வேறதாமோ
பந்தமும் தீயும் வேறோ” (பாய்ச்சலூர் பதிகம் - 7)
எனும் பாடலின் மூலம் சாதி வேறுபாட்டை காண விழையும் உத்திரநல்லூர் நங்கையும்ää
“ஏட்டையும் பெண்கள் தொடுவது தீமையென்
றெண்ணி இருந்தவர் மாய்ந்து விட்டார்
வீட்டுக்குள்ளே பெண்ணை பூட்டி வைப்போமென்ற
விந்தை மனிதர் தலை கவிழ்ந்தார்”
(பா. கவி. பெண் விடுதலைக்கும்மி)
என பெண் விடுதலை பேசிய பாரதி உட்பட பலரையும் இங்கு குறிப்பிடுவது சரியானதாக இருக்க முடியும். மேற்சுட்டிய நிலையினை நாம் நோக்குகின்ற போது பகுத்தறிவு என்பது சமூக இயக்கத்தின் தேவை கருதியும் சமூக மாற்றம் கருதியும் சமூக மீட்டுருவாக்கம் கருதியுமே பலராலும் முன்னெடுக்கப்பட்டுள்ளதை நாம் புரிந்து கொள்ள முடியும். மட்டுமின்றி பகுத்தறிவு என்றால் என்ன? அதன் தேவை என்ன? என்பன குறித்து தேடுகின்ற போது அவை பெரிதும் சாதி, மதம், கடவுள், சடங்கு சம்பிரதாயங்களுக்கு எதிரானதாகவும் இவற்றை செயல்படுத்திக் கொண்டிருந்த பிராமணியத்திற்கு எதிரான ஒன்றாக அமைவதும் கவனத்தில் கொள்ளத் தக்கதாகும். அத்துடன் இந்த பகுத்தறிவினை சமூக இயக்கத்தில் போராளிகள் இரண்டு நிலைகளில் எதிர் கொள்கின்றனர் அல்லது பயன் படுத்துகின்றனர். தந்தை பெரியார் கடவுளை நிராகரித்து இந்தப் பகுத்தறிவு ஆயுதத்தை முன்னெடுக்கின்றார். மற்றையோர்கள் பெரும்பாலும் பிராமணியத்தின் கருத்தாக்கத்திற்கு மாற்றாக அனைவருக்கும் பொதுவான ஒரு கடவுளை ஒரு வழிபாட்டு முறையை முன்னிறுத்தி தமது பகுத்தறிவு வாதத்தை முன்வைக்கின்றார்கள் என்பதும் இங்கு நினைவில் கொள்ளத் தக்கதாக அமைகின்றது.

Comments
Post a Comment