காதல்
மனிதனை மனிதனாக்கும்
நாகரீகத்தின் தொடக்கம்
இல்லறத்திற்கான
விவாத மேடை
சாதி மதங்களின்
சங்கமப் பேழை
நானும் அவளும்
பருவம் எய்தியதின் அடையாளம்
வாழ்வின் வசந்தத்திற்கான
தொடக்க விழா
நரம்புகளை நாணேற்றி
மனதை நடுங்க வைக்கும் மந்திரம்;
தியாகம் உன்னிடமும்
இருப்பதை உணர்த்தும் முதற்சொல்
காமம் தலைததூக்கியதின்
வெளிப்பாடு
கவிதையின்
ஊற்றுக்கண்
காலத்தை தின்னும்
கறையான்
நட்பையும் உறவையும்
சேதப்படுத்தும் முதுசொல்
சிரிப்பால் சிறைவைக்கும்
விலங்கு
மனிதனை அடிமையாக்கும்
போதை
தூய்மையும் பொய்மையும்
கட்டி புரளும் இனிய மொழி
அது மரணத்திற்கான
நுழைவு வாயில்

சாதி மதங்களின்
ReplyDeleteசங்கமப் பேழை
மனதை நடுங்க வைக்கும் மந்திரம்;
காலத்தை தின்னும்
கறையான்
நட்பையும் உறவையும்
சேதப்படுத்தும் முதுசொல்
அருமையான வரிகள். தொடர்க. வாழ்த்துக்கள்.