Skip to main content

மொட்டவிழ்க்கும் சிறுபொழுதில்

துஞ்சும் யானைக் கூட்டமாய் கிடந்த
எண்ணற்றப் பாறைகளை சிதிலமாக்கியவன் அவன்
முல்லை மொட்டவிழ்க்கும் சிறுபொழுதில்
கைக் கொண்ட கருமருந்தினால்
தனது மூச்சுக் காற்றை நிறுத்திக் கொள்கிறான்
வேறு வழியின்றி
கொழுத்தப்பட்ட திரி கருமருந்தின் நாற்றத்தோடு
நீட்டிப்பைக் குறைத்துக் கொண்டே வருகிறது
இன்னுமொரு மொட்டவிழும் பொழுதில்
கனத்த ஓசையோடு சிதறலாம் அந்தப் பாறை
அதில் அவனுக்கான கற்களும் இருக்கலாம்
எப்போதும் போலவே வேறுபட்ட முகங்களோடு

Comments

Post a Comment

Popular posts from this blog

நூல் வெளியீடு

சு.செல்வகுமாரனின் பிரதிகளின் பண்பாட்டு அரசியல் நூலினை சி.சொக்கலிங்கம்(தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்ற மாநிலச் செயலாளர் ) அவர்கள் வெளியிட பேராசிரியர் முனைவர் வி. வேணுகுமார் பெற்று கொள்கிறார்.

விளிம்புநிலை வாசிப்பு நோக்கில் ஒரு சவரக்காரனின் கவிதை மயிருகள் சு.செல்வகுமாரன்

முன்னுரை “தலித்” எனும் சொல்லுக்கு பன்முகப்பட்ட பொருள் நிலைகள் வழங்கப்பட்டு வருகின்றன. அதன் உள்ளீடுகளில் ஒன்றாகவே விளிம்புநிலை எனும் சொல்லாடலும் அர்த்தம் பெறுகிறது. விளிம்புநிலை ஒரு முனை என்றால் அதன் இன்னொரு முனையில் அல்லது மையத்தில் ஒடுக்குதலின் இயக்கம் நிகழ்வதைக் காணலாம். அந்த இன்னொரு முனையும் ஒரு விளிம்புதான் என்று தலித்திய, இடது சாரியச் சிந்தனையாளர்கள் அதன் அடுக்கு முறையைக் கலைத்துப் போடுவதும் உண்டு. சாதியவாதிகளோ சேரியை ஊரின் கடைசியாகச் சுட்டுவர். ஆனால் தலித்தியச் சிந்தனையாளர்கள் சேரியை ஊரின் தொடக்கமாக முன்வைப்பதும் இங்கு கவனத்திற்குரியது. விளிம்பு நிலை மக்கள் குறித்து பேசும் சந்திரபோஸ் “நிலம், பணம், சாதி, அதிகாரம், அனைத்துவித ஆதிக்கம், மேட்டிமை, மேலாண்மை ஆகிய உரிமைகளுடன் மையத்தில் இருப்பவர்களால் புறந்தள்ளப்பட்ட – மறுத்து ஒதுக்கப்பட்ட, காயப்படுத்தப்பட்ட பழங்குடியினர், ஒருங்கிணைக்கப்படாத தொழிலாளர்கள், குழந்தைத் தொழிலாளர்கள், அரவாணிகள், விபச்சாரத் தொழிலில் தள்ளப்பட்டுள்ளப் பெண்கள், கைவிடப் பட்டவர்கள், ஆதரவற்ற விதவைகள், ஒடுக்கப்பட்ட தேசிய இனத்தினர் எனப் பரந்துபட்ட பொருள் வரையறையின...

மௌனம்

எதாலும் இட்டு நிரப்ப முடியாத பெருவெளியாய் சிலந்தி வலையில் இளைப்பாற எண்ணிய விட்டில் பூச்சியின் அவஸ்தையாய் நிகழ்ந்திருந்தது உனது மரணம் விஷம் பொருந்திய அந்த கொடிய பொழுதினில் கண் இமைகளுக்குள் சிறகசைத்துப் பறந்து கொண்டிருக்கிறாய் நீ ஓவியக்காரனின் தூரிகையாய் மீளவும் மீளவுமாய் நனைந்தபடி கொலைக்காரர்களின் மனங்களைப் போல அடர்த்தியாய் நிறைந்திருக்கிறது