குளத்துமடை திறக்கப்பட்ட கணத்தில்
வாய்க்காலில் சீறிப்பாய்ந்திடும்
பெரு வெள்ளமாய் நீண்டு செல்கிறது
விரைவு இரயில்வண்டி
மடைமுகத்து ஈர்ப்பில் வெளியேற்றப்படும்
விளிச்சி சள்ளை கயிலி மீன்களாய்
ஜெனரல் கம்பார்ட்மன்ற் மக்கள்
சுருட்டப்பட்ட லக்கேஜ் பொதிகளாய்
உயரே பொருத்தப்பட்டிருக்கும்
ஓரடி அகல கம்பிகளிலும்
கழிவறை ஒரங்களிலும்
பூட்டிவிடாதபடிக்கு கதவிடுக்குகளிலும்.
இரயில் வண்டியாய் நீள்கிறது இருள்
நகரத்து மின்ஒளிகளை நக்கித் துடைத்தபடி.
வாய்க்காலில் சீறிப்பாய்ந்திடும்
பெரு வெள்ளமாய் நீண்டு செல்கிறது
விரைவு இரயில்வண்டி
மடைமுகத்து ஈர்ப்பில் வெளியேற்றப்படும்
விளிச்சி சள்ளை கயிலி மீன்களாய்
ஜெனரல் கம்பார்ட்மன்ற் மக்கள்
சுருட்டப்பட்ட லக்கேஜ் பொதிகளாய்
உயரே பொருத்தப்பட்டிருக்கும்
ஓரடி அகல கம்பிகளிலும்
கழிவறை ஒரங்களிலும்
பூட்டிவிடாதபடிக்கு கதவிடுக்குகளிலும்.
இரயில் வண்டியாய் நீள்கிறது இருள்
நகரத்து மின்ஒளிகளை நக்கித் துடைத்தபடி.

Comments
Post a Comment