Skip to main content

Posts

Showing posts from 2012

மாவட்ட (அ) வட்டார இலக்கியக் களஞ்சியம் - உருவாக்கத்தின் தேவை குமரி மாவட்டத்தை முன்வைத்து

முனைவர் சு. செல்வகுமாரன் தமிழ் உதவிப்பேராசிரியர் (அண்ணாமலைப்பல்கலைக்கழகம்) அரசு கலைக் கல்லூரி பரமக்குடி இலக்கியம் எனும் பெரும் நீரோட்டம் இன்று புத்தகம், இதழ்கள், இணைய இதழ்கள், பிளாக்கர், முகநூல் எனும் வெவ்வேறு ஊடகங்களின் வாயிலாக மக்களை வந்தடைந்து கொண்டிருக்கின்றன. அந்தந்த தளத்துக்கேற்ப வாசகர்களும் வேறுபட்ட சிந்தனைப் போக்குடையவர்களாக விளங்குகின்றனர். மேலும் நவீன தொழில்நுட்ப வசதி இன்று பெரும்பான்மையோரை படைப்பாளிகளாகவும், விமர்சகராகவும் ஆக்கிக் கொண்டிருக்கின்றன. இவர்கள் தாம் சிந்தித்தவற்றை ஏதோ ஒரு குழுசார்ந்த வாசகத் தளத்திற்கோ, தேவைப்பட்டால் பொது வாசகத்தளத்திற்கோ உடனடியாக கொண்டு சேர்க்கின்ற வாய்ப்பும் அது குறித்த விமர்சனத்தை உடனடியாக பெறுகின்ற வாய்ப்பும் இன்று அதிகமாகவே உள்ளது. அதுபோலவே ஒரு படைப்பாக்கத்தின் ஒரு சில பி...
தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் குமரி மாவட்டம் சார்பில் பேராசிரியர் நா.வானமாமலை நினைவு 34 - வது கலை இலக்கிய முகாம் மே – 26 - 27 ல் முட்டத்தில் நடை பெற்றது. நிகழ்வில் சு. செல்வகுமாரனின் பூவரசம்பூ மஞ்சளில் இருந்து சிகப்பாக கவிதை நூலினை தோழியர் வா. கீதா அவர்கள் வெளியிட தோழர் டி. தருமராஜ் அவர்கள் பெற்றுக் கொண்டார்.

நூல் வெளியீடு

சு.செல்வகுமாரனின் பிரதிகளின் பண்பாட்டு அரசியல் நூலினை சி.சொக்கலிங்கம்(தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்ற மாநிலச் செயலாளர் ) அவர்கள் வெளியிட பேராசிரியர் முனைவர் வி. வேணுகுமார் பெற்று கொள்கிறார்.

கருமுடியின் கம்பீரம்

ஒவ்வொரு பொழுதும் எனக்குள் இருக்கும் உன்னை அழித்து விடப் பார்க்கிறார்கள். முகம் காட்டியபடியே எனக்குள் நீ எல்லா காலங்களிலும். அப்பாவிடம் முகச்சவரம் செய்த ஊர் இளைஞர்களிடம் முகம் காட்டும் கருமுடியின் கம்பீரத்தோடு

மௌனம்

எதாலும் இட்டு நிரப்ப முடியாத பெருவெளியாய் சிலந்தி வலையில் இளைப்பாற எண்ணிய விட்டில் பூச்சியின் அவஸ்தையாய் நிகழ்ந்திருந்தது உனது மரணம் விஷம் பொருந்திய அந்த கொடிய பொழுதினில் கண் இமைகளுக்குள் சிறகசைத்துப் பறந்து கொண்டிருக்கிறாய் நீ ஓவியக்காரனின் தூரிகையாய் மீளவும் மீளவுமாய் நனைந்தபடி கொலைக்காரர்களின் மனங்களைப் போல அடர்த்தியாய் நிறைந்திருக்கிறது