Skip to main content

Posts

Showing posts from 2023

அடங்கிப் போனான்

அவன் ஊருக்குள் வாழ்ந்திருந்த காலத்தில் பதுங்குவதில் பூனையைப் போலவும் பாய்வதில் சிறுத்தையைப் போலவும் பிறர்பொருளை கவ்விக் கொள்வதில் காகத்தைப் போலவும் அடுத்தவரை துவசம் செய்வதில் காட்டு யானையைப் போலவும் அன்பு காட்டுவதில் இளந்தூறலைப் போலவும் கோபத்தில் முகம் காட்டுகிற போது கர்ஜிக்கும் சிங்கத்தைப் போலவும் மவுனத்தில் சாரைப்பாம்பைப் போலவும் நடமாடித் திரிந்தான் அவன் மரணித்த போது எந்த ஒப்புமையும் தோன்றவில்லை அடங்கிப் போனான் பிரபஞ்சம் எனும் சுருக்கு வலைக்குள்…….

விளிம்புநிலை வாசிப்பு நோக்கில் ஒரு சவரக்காரனின் கவிதை மயிருகள் சு.செல்வகுமாரன்

முன்னுரை “தலித்” எனும் சொல்லுக்கு பன்முகப்பட்ட பொருள் நிலைகள் வழங்கப்பட்டு வருகின்றன. அதன் உள்ளீடுகளில் ஒன்றாகவே விளிம்புநிலை எனும் சொல்லாடலும் அர்த்தம் பெறுகிறது. விளிம்புநிலை ஒரு முனை என்றால் அதன் இன்னொரு முனையில் அல்லது மையத்தில் ஒடுக்குதலின் இயக்கம் நிகழ்வதைக் காணலாம். அந்த இன்னொரு முனையும் ஒரு விளிம்புதான் என்று தலித்திய, இடது சாரியச் சிந்தனையாளர்கள் அதன் அடுக்கு முறையைக் கலைத்துப் போடுவதும் உண்டு. சாதியவாதிகளோ சேரியை ஊரின் கடைசியாகச் சுட்டுவர். ஆனால் தலித்தியச் சிந்தனையாளர்கள் சேரியை ஊரின் தொடக்கமாக முன்வைப்பதும் இங்கு கவனத்திற்குரியது. விளிம்பு நிலை மக்கள் குறித்து பேசும் சந்திரபோஸ் “நிலம், பணம், சாதி, அதிகாரம், அனைத்துவித ஆதிக்கம், மேட்டிமை, மேலாண்மை ஆகிய உரிமைகளுடன் மையத்தில் இருப்பவர்களால் புறந்தள்ளப்பட்ட – மறுத்து ஒதுக்கப்பட்ட, காயப்படுத்தப்பட்ட பழங்குடியினர், ஒருங்கிணைக்கப்படாத தொழிலாளர்கள், குழந்தைத் தொழிலாளர்கள், அரவாணிகள், விபச்சாரத் தொழிலில் தள்ளப்பட்டுள்ளப் பெண்கள், கைவிடப் பட்டவர்கள், ஆதரவற்ற விதவைகள், ஒடுக்கப்பட்ட தேசிய இனத்தினர் எனப் பரந்துபட்ட பொருள் வரையறையின...

அயலகப் புனைவு வெளியும் தமிழக வாசிப்புச் சூழலும் - பேரா அ. குணசேகரன்

- கவிஞர், ஆய்வாளர், பேராசிரியர் எனப் பல நிலைகளிலும் தம் பணிகளைத் திறம்பட ஆற்றிவரும் முனைவர். சு. செல்வகுமாரன், நவீன இலக்கியக் களத்தில் அதிலும் குறிப்பாக புலம்பெயர்ந்தோர்ப் புனைவு வெளியைத் தம் ஆய்வுக்களமாகக் தேர்ந்து கொண்டு தொடர்ந்து செயலாற்றி வருபவர். கேரளப் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டத்திற்காகப் பயின்று கொண்டிருந்த காலத்திலேயே நூல் எழுதி வெளியிடும் பணியில் தம்மை ஈடுபடுத்திக்கொண்டு, தொடர்ந்து ஆண்டுக்கொரு நூல் வெளியிடுவது என்ற நோக்கில் பல நூல்களை வெளியிட்டுக் கவனம் பெற்று வருபவர். இவர் தம் அண்மைப் படைப்பாக “விமரிசன நோக்கில் அயலகத் தமிழ் புதினங்கள்” என்னும் நூலை ஆய்வு உலகுக்குக் கையளிக்கிறார். அயலகப் புதினப் படைப்புகள் பற்றிய நூலை வழங்குவதற்குரிய வாசிப்பு அனுபவமும் ஆய்வு அனுபவமும் ஒருங்கே பெற்றிருந்ததன் காரணமாக இந்நூல் எளிதில் சாத்தியமாகியிருக்கிறது. தம் முனைவர் பட்ட ஆய்வுக்காக “ஈழ...